தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் ஐடி ரெய்டு… சென்னையில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!
Author: Babu Lakshmanan2 January 2024, 4:28 pm
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் வருமான வரித்துறையினர் சோதனையை ஆரம்பித்து விட்டனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஷெனாய் நகரில் உள்ள சிஎம்கே நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் சுமார் 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.