2வது தலைநகராக சென்னை.. ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்… விசிகி மாநாட்டில் முக்கிய தீர்மானம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 8:18 pm

2வது தலைநகராக சென்னை.. ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்… விசிகி மாநாட்டில் முக்கிய தீர்மானம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ எனும் தலைப்பிலான மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

சனநாயகம் காக்க உயிரீந்த ஈகியருக்கு வீர வணக்கம்!
நூற்றாண்டு காணும் ஆளுமைகளுக்கு வீர வணக்கம்! பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு நல்குக! பெரும்பானமைவாத அரசியலைப் புறக்கணிப்போம்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக! சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திடுக! சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திடுக ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுக தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்பப் பெறுக ஒப்புகைச் சீட்டுகளைன் அடிப்படையில் தேர்தல் நடத்திடுக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வருக. தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்க. கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை செயல்படுத்துக. உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாநில அரசுகளே நியமிக்க வேண்டும். வழக்காடு மொழியாக தமிழை அறிவித்திடுக. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை திரும்பப் பெறுக.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 325

    0

    0