வீட்டுக்குள் வந்து தோளில் கைபோட்ட டெலிவரி பாய்.. ஓயாமல் பாலியல் தொல்லை ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ஆதரவுக்கரம் நீட்டிய சின்மயி!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 10:06 am

மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்த பெண்ணுக்கு வீடு புகுந்து டெலிவரி பாய் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இளம்பெண் ஒருவர் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அதனை எடுத்து வந்த பிக் பாஸ்கெட் டெலிவரி ஊழியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி மதியம் 1 மணியளவில் நடந்ததாக சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

இது தொடர்பாக அந்தப் பெண் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- எனது தோழி ஆன்லைன் டெலிவரி தளத்தில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் கடந்த 5ம் தேதி டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரி செய்ய வந்த ஊழியரிடம், கதவிற்கு அருகில் உள்ள இருக்கையில் பொருட்களை வைத்து விட்டு செல்லுமாறு கூறினேன். அந்த சமயம் நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்தேன்.

ஆனால், எனது பேச்சை கேட்காமல் அந்த டெலிவரி ஊழியர், என் அனுமதியின்றி சமையலை வரை வந்தார். பின்னர், எனது தோளில் கை வைத்த அந்த நபர், என்னை நெருங்கி வந்தார். இதனால், அச்சமடைந்த நான் ஹாலுக்கு ஓடிச் சென்று, கதவை திறந்து, வெளியே போ என்று கூறினேன். ஆனால், அந்த நபர் கதவை அடைத்து விட்டு, உங்கள் செல்போன் எண்ணை கொடுங்கள் என 20 முறைக்கு மேலாக கேட்டு டார்ச்சர் செய்தார்.

தொடர்ந்து அவரிடம் சத்தம் போட்டு வந்தேன். வெளியே கேமரா இருக்கிறது, வெளியே செல்லுங்கள். மற்றொரு அறையில் என் தோழி இருக்கிறாள், காவல்துறையை அழைப்பேன் என்றேன். ஆனால், அதை பொருட்படுத்தாத அந்த நபர் மீண்டும் மீண்டும் என் போன் நம்பரையே கேட்டார். கடைசியில் என் தோழிக்கு போன் செய்து உததவிக்கு அழைத்தேன். அவர் அதை பார்த்து, சிரித்து விட்டே வெளியே சென்றார். உண்மையாக, எனக்கு என்ன நடக்கிறது என ஒன்றேமே புரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க பிக் பாஸ்கெட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவரை பணியில் இருந்து நீக்குகிறோம் என என்னிடம் சொன்னார்கள். காவல் நிலையத்தில் புகாரளிக்க அந்த டெலிவரி ஊழியரின் போன் நம்பர் மற்றும் பெயர் வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால், பெயரை மட்டுமே கூறிய அவர்கள், செல்போன் எண் உள்ளிட்ட வேறு எந்த விவரத்தையும் தர மறுத்து விட்டனர்.

5 வெவ்வேறு லெவல் எக்சிகியூட்டிவ்களிடம் பேசியும் அவர்கள் விபரங்களை தர மறுத்தனர். நான் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கூறுகிறேன், என்ன நடந்து என அனைத்தையும் கூறினேன். இருப்பினும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.மேலும் சமூக ஊடகங்கள் அல்லது ட்விட்டரில் எதையும் பகிர வேண்டாம், காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என என்னிடம் கூறினர். அவர்கள் நிறுவனத்திற்குள்ளேயே கடும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். என்னால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது! காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளேன்.

பிக் பாஸ்கெட் டெலிவரி ஊழியர் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்ய உள்ளேன். டெலிவரி பொருள்களை வாங்கும் அனைவரும் குறிப்பாக பெண்கள் மிக கவனமாக இருங்கள், எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவுக்கு சென்னை பெருநகர காவல்துறையினரும் பதிலளித்தனர். அந்தப் பதிவில், “இந்த விஷயத்தில் பெருநகர சென்னை காவல்துறை உங்களுக்கு உதவும். உங்கள் தொடர்பு எண்ணை மெசேஜில் பகிரவும். எங்கள் குழு உங்களுக்கு உதவும். பயப்பட வேண்டாம்,” என ட்வீட் செய்துள்ளது.

இதனிடையே, பிரபல பாடகி சின்மயி பாதிக்கப்பட்ட பெண்ணின் டுவிட்டை ரீடுவிட் செய்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…