கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் ; பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்… சென்னையில் பயங்கரம்..!!
Author: Babu Lakshmanan7 July 2023, 7:47 pm
சென்னை : சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
நந்தம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீன் என்ற இளைஞர் வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், அந்த இளைஞரின் காதலை ஏற்க மாணவி மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.