சென்னையில் மீண்டும் அதிர்ச்சி… பழங்குடியின மக்களுக்கு மேலும் ஒரு திரையரங்கில் அனுமதி மறுப்பு ; வலுக்கும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 6:10 pm

சென்னையில் படம் பார்க்க சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் வழங்குவதில் அழைக்கப்பட்டு, அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் மக்கள் சென்றுள்ளனர். அப்போது, தியேட்டருக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரோகிணி திரையரங்கு தரப்பில், பத்து தல படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், திரையரங்கின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற பழங்குடியின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தங்களுக்கு டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் குற்றம்சாட்டிய பழங்குடியின மக்கள், பணம் கொடுத்து தானே டிக்கெட் கேட்கிறோம் என கூறியதாகவும், டிக்கெட்டை வைத்துகொண்டே இல்லை என கூறிய காரணம் என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 425

    0

    0