செப்.,10 முதல் பி.இ. படிப்புகளுக்கான கலந்தாய்வு : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அமைச்சர் பொன்முடி..!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 1:47 pm

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது :- தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை 4 கட்டங்களாக நடைபெறும். செப். 10-12 முதற்கட்டமும், செப்.25-27 இரண்டாம் கட்டமும், அக்.13-15 3ம் கட்டமும், அக்.29-31 வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் மற்றும் புதிய பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்த முதல்வர் வேண்டுகொள் விடுத்துள்ளார். அதே ஏற்றுக்கொண்டு அனைத்து மாணவர்களும் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 593

    0

    0