சென்னை : சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, கடைசியாக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்த்து அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு உருகி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிரியா. கால்பந்து விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.
அண்மையில் பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தங்களின் மகளின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையுமே காரணம் என்றும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சோமசுந்தரம், எலும்பு சிகிச்சை மருத்துவர் பால்ராம் சங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, கடைசியாக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்த்து அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு உருகி வருகின்றனர்.
அவரது வாட்ஸ்அப் ஸ்டேடஸில், ” அனைத்து நண்பர்களும், குடும்பத்தினர்களும் நான் சீக்கிரமாவே ரெடி ஆயிட்டு கம் பேக் குடுப்பேன். So எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி குடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது… நீங்க நான் ரிட்டன் வருவேனு நம்பிக்கையா இருக்கீங்க… லவ் யூ Friends and Family” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.