பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. குறிப்பாக, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்து வந்தது. புதிய உச்சமாக ரூ.44 ஆயிரத்தையும் கடந்து விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்து வாடிக்கையாளர்களை ஆறுதல் படுத்தியுள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து 43,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 சரிந்து ரூ.5,470க்கு விற்பனையானது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து 74 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ ரூ. 700 குறைந்து 74,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…
தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
This website uses cookies.