அரசு சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில் ஐடி ரெய்டு… தமிழகத்தில் 5வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறையினர் சோதனை!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 11:31 am

சென்னையில் அரசு சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றன். கடந்த 4 நாட்களாக இந்த சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், 5வது நாளாக இன்றும் சோதனையை நடத்தி வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள A1 சைக்கிள் உரிமையாளரும், இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை மொத்தமாக சுந்தர பரிபூரணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!