சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரின் கழுத்தில் கத்திரிக்கோலால் நோயாளி ஒருவர் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முதன்மையான அரசு மருத்துவமனைகளில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முக்கியமானதாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா. இவரிடம், பாலாஜி எனும் உள்நோயாளி ஒருவர், தனது கையில் போடப்பட்டிருந்த ஐ.வி. ஊசியை அகற்றக் கோரி கேட்டுள்ளார். சிகிச்சை முடியாமல் அதனை அகற்ற மருத்துவர் சூர்யா மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பாலாஜி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த பாலாஜி, மருத்துவப் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக் கோலை எடுத்து மருத்துவர் சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் சூர்யா, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சக மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், மருத்துவரை தாக்கிய உள்நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாகவும் கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
This website uses cookies.