‘எங்கடா, இங்கிருந்த ரோட்ட காணோம்’… சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து : பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்…!!

Author: Babu Lakshmanan
1 November 2022, 4:29 pm

சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி வருகிறது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இப்படியிருக்கையில், இன்று 2வது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் கீழே கணேசபுரம் பகுதியில் மழைநீரில் பயணிகளுடன் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால், பேருந்தில் இருந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் மக்களை மீட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் வேகமாக அகற்றப்பட்டு விட்டாலும், பெரும்பாலான இடங்கள் மழையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 602

    0

    0