‘இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?’ சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை… வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி..!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 8:59 am

சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்த சூழலில், வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 13ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிலும், குறிப்பாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 3 வடதமிழக மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், டெல்டா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மின கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக சென்னை உள்பட 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை முதலே சென்னையில் பரவலான மழை பெய்யத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னையில்
பட்டினபாக்கம், சாந்தோம், மெரினா, சேப்பாக்கம், சிந்தாரிப்பேட்டை, போரூர், ராமாபுரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் சூழந்திருப்பதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 441

    0

    0