தேனி எம்பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது… ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 3:52 pm

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். முன்னதாக, அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார்.

எனவே, தேனி தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் இன்று தீர்ப்பை வெளியிட்டார். தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என அறிவித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 431

    0

    0