லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியிருக்கையில், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு படக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு மட்டும் 5 காட்சிகளை வெளியிட அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், லியோ திரைப்படத்தை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரையில் 5 காட்சிகளாக திரையிட வேண்டும் என்று நேரக் கட்டுப்பாடுகளை வெளியிட்டது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, லியோ படத்திற்கு அதிகாலை 4 மணிநேரக் காட்சிக்கு அனுமதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், லியோ திரைப்பட காட்சிகள் அனுமதி தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஏன் வழக்கு தொடரவில்லை என்று பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காலை 9 மணிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசை மீண்டும் அணுக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
This website uses cookies.