இனி இரட்டை இலை சின்னம் கேட்டு வராதீங்க… ஓபிஎஸ்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் வைத்த குட்டு…!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 4:24 pm

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதிமுக பெயர், சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். எனவே, இதற்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, அதிமுக பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர்பேடுகளை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். ஆனால், இந்த இரு நீதிபதி அமர்வும் தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், தனி நீதிபதி முன்பு உரிய மனு தாக்கல் செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்க நிரந்தர தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே, பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நிரந்தம் செய்தும் உத்தரவிடப்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ