திருமாவளவன் உள்ளிட்டோர் மீதான கொலை முயற்சி வழக்கு ; சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த பரபரப்பு உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 6:26 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 10 பேர் மீதான கொலை முயற்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த வீரப்பன் உள்பட 10 பேர் தாக்குதல் நடத்தியதாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வேதா அருண் நாகராஜன் என்பவர் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக, தனது புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் புலன் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன்..? என்று நீதிபதி சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0