தரமற்ற பொங்கல் பரிசுக்கு உரிய பதில் தர வேண்டும் : அமைச்சர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2022, 8:28 pm
சென்னை : பொங்கல் பரிசு தொடர்பான வழக்கில் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்காய் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ பெரியசாமி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பரிசு தொகுப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் வெல்லம், பச்சரிசி, புளி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட பொருட்கள் அடங்கிய ‛பொங்கல் பரிசு தொகுப்பு’ வழங்கப்பட்டது. இதில், சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.