திமுக அமைச்சர்களை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கும் சிக்கல்… சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த திடீர் முடிவு..!!
Author: Babu Lakshmanan30 August 2023, 9:25 pm
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.
2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற உள்ளது.
ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.