சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு… அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்…!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 12:42 pm

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் யூடியூப் சேனலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை உருவாக்கும் விதமாக இருப்பதாகக் கூறி சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாமலைக்கு சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் ஆணையிட்டார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…