நடிகை விந்தியா குறித்து அவதூறு பேச்சு… திமுக நிர்வாகிக்கு செக் வைத்த நீதிமன்றம் ; பரபரப்பு உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 2:06 pm
Quick Share

நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர், திமுகவில் கொள்கைப் பரப்பு துணை செயலாளராகவும், விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் செய்தி தொடர்பாளர் பொறுப்புகளையும் வகித்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி பிரச்சனைகளில் சிக்குவது வழக்கம்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் குறித்து பேசி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

தனது யூடியூப் சேனலில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார். இதை தொடர்ந்து, தன்னை அவதூறாக பேசியதாக நடிகை விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து, குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை விந்தியா குறித்த அவதூறு வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, குமரனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமன் உத்தரவிட்டார்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 903

    0

    0