அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு… பரபரப்பு தீர்ப்பை அளித்த சென்னை உயர்நீதிமன்றம் ; அதிர்ச்சியில் திமுகவினர்…!!!
Author: Babu Lakshmanan19 October 2023, 11:28 am
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு… பரபரப்பை தீர்ப்பை அளித்த சென்னை உயர்நீதிமன்றம் ; அதிர்ச்சியில் திமுகவினர்…!!!
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 8 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேவேளையில், சிறை நிர்வாகத்தால் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது எனக்கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.