சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு : தேதியுடன் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2023, 10:48 am
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு : தேதியுடன் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!
வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணிகள் 70-80 சதவிகிதம் முடிந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிய அதிகாரிகள் இந்த பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ததில் ஏராளமான பிரச்னைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இன்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, “இந்த பேருந்த நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2310 பேருந்துகள் தினந்தோறும் இங்கிருந்து இயக்கப்படும்.
இதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் ஆகும். இந்த பேருந்து நிலையத்தை ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்த முடியும்.
இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க பார்மசி, ஓட்டுநர் மற்றும் நடத்தினார்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகியவசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. இங்கு புற காவல் நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியளித்துள்ளார்.
எனவே நிரந்தர காவல் நிலையம் அமைக்கப்படும். இந்த பேருந்து முனையம், வரும் தமிழ் புத்தாண்டான தை 1ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார்” என்று கூறியுள்ளார்.