CM, அமைச்சர்கள் மட்டும் பாதுகாப்பா பார்த்தாங்க.. மக்களை கண்டுக்கல : வெட்கக்கேடு.. இபிஎஸ் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 2:35 pm

சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது, இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண மக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அதன்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தால் லட்சக்கணக்கானோர் மெரினா பீச்சில் கூடியதால் கூட்ட நெரிசலில் பல பேர் உயிரிழந்தனர்

அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பத்திற்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவது செய்தி வாயிலாக தெரிகிறது.

முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாக தான் லட்சக்கணக்கானோர் குடிநீர் தகவலை எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது.

முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு துன்பம் தான் மீதம். அரசின் செயலற்றுத் தன்மை கையாளாகாத தன்மையை காட்டுகிறது இது வெட்கக்கேடான விஷயம்.

இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் இவர் தான் அழைப்பு விட்டார்.

இது அரசின் அலட்சியம். ஒரு நிகழ்ச்சியை கூட நடத்த முடியாத அரசாக உள்ளது. அரசின் கவனக்குறைவால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர் என குற்றம்சாட்டினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 628

    0

    0