சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து… உடனே விரைந்த போலீஸ்… சம்பவ இடத்தில் நேரில் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 9:38 pm

சென்னை ; காஞ்சிபுரம் அருகே சென்னை மேயர் பிரியா சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. முன்னாள் சென்ற கார் திடீரென திரும்பியதால் பின்னால் சென்ற மேயர் பிரியாவின் கார் அதன்மீது பயங்கரமாக மோதியது. பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கார் ஓட்டுநர் லேசாக காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். பின்னர், மாற்றுக் கார் வரவழைத்து மேயர் பிரியா புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!