சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் பொறுப்பு வகித்து வருகிறார். 29 வயதே ஆன இளம்வயது மேரான பிரியா சென்னை மழை வெள்ள பேரிடர்களின் போது மழையை பொருட்படுத்தாமல் பணி செய்ததால் அப்பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர்.
சென்னை மாநகராட்சிகளின் மேயர்களுக்கு செங்கோலும் தங்கப்பதக்கமும் அணிவிக்கப்படுகிறது. ஆட்சியர், நீதிபதிகளுக்கு இருப்பது போல செங்கோல் தாங்குபவரும், தபேதரும் சென்னை மேயருக்கும் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் முதல் பெண் தபேதராக மாதவி என்ற பெண், மேயர் பிரியாவுக்கு நியமிக்கப்பட்டார். தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேயருக்கு கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தும் பணியும் தபேதாரின் பணிதான்.
அவர் லிப்ஸ்டிக்குக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தபேதார் மாதவி எப்போதும் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் வழக்கம் உள்ளவர். ஆனால் இதை மாநகராட்சி கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் லிப்ஸ்டிக் பூசி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதவி லிப்ஸ்டிக் பூசியதாகவும், அதை மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கரன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்காகவே தற்போது அவர் மணலி மண்டலத்திற்க பணியிட மாற்றம் செய்யப்பட்டதகாவும் கூறப்படுகிறது. ஆனால் உரிய நேரத்திற்கு பணிக்கு வராதது, மூத்த அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட காணரங்களால் அவருக்கு மெமோ அளித்தாகவும், ஆனால் அவர் உரிய பதில் அளிக்காததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: NH ரோட்டில் காருக்குள் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தினர் : மர்ம மரணமா? விசாரணையில் ஷாக்..!!
இது குறித்து பேசிய மாதவி, மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மனித உரிமை மீறல்.
15 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரியும் நிலையில், எனது வேலையில் எந்தவிதமான தொய்வும் இருந்ததில்லை. எனக்கு லிப்ஸ்டிக் அணிவது மிகவும் பிடிக்கும், 5 வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உண்டு.
மெமோ அனுப்பப்பட்ட தேதியான ஆகஸ்ட் 6ஆம் தேதி அரை மணி நேரம் தாமதமாக அதாவது 10:30 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்தேன். காலில் சிறிய காயம் இருப்பதால் தான் தாமதம் ஏற்பட்டது. லிப்ஸ்டிக்கை குறைத்துக் கொள்ள வேண்டும் என மேயர் கூறிய உத்தவை மீறியது தான் மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதலளித்துள்ளார்.
ஆனால் மாதவி நேரம் தவறி வந்ததாகவும், கடமை தவறியதற்காக மட்டும் மெமோ அனுப்பப்பட்டுள்ளதாகவும், பணியை சரி வர செய்யாத காரணத்தால்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.