சென்னை ; சென்னையில் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பின்னணியில் ஒழித்த பாடலால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கோபமடைந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, பாஜக என தனித்தனியே கூட்டணிகளை அமைத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அண்மையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்த சீமான் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், இந்த முறை மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் இந்த சின்னத்தின் மீது சீமான் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்ததால், மைக் சின்னத்திலேயே போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கொதிக்க வைத்துவிட்டது.
அதாவது சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசும் போது, சீமானுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு என்கிற பாடலுடன் ரொம்பவே சப்தமாக அலறியது. இதனால், கடுப்பான சீமான், திரும்பி பின்னால் இருந்தவரை முறைத்ததால், அவர் அங்கிருந்து சத்தம் இல்லாமல் கிளம்பி விட்டார்.
தங்களின் சின்னமான கரும்பு விவசாயி கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி மைக் சின்னத்துடன் போட்டி போட முடிவு செய்த சீமானை கிண்டல் செய்யும் விதமாகவே அந்த செய்தியாளர் சந்திப்பில் நடந்த நிகழ்வு அமைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மைக் சின்னத்தை நாம் தமிழர் கட்சி தேர்வு செய்துவிட்ட நிலையில், ரத்த கொதிப்பு பாடலில் வரும் வரிகளும் தம்பிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிறகு மைக் சின்னம் பிரபலமானதோ இல்லையோ, அந்த கானா குரூப்பின் பாடல் படுவைரலானதது மிச்சம் என்று உச்சு கொட்டுகின்றனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.