ரத்த வாந்தி எடுத்து கல்லூரி மாணவன் பலி… மாணவர்கள் திடீர் சாலை மறியல் ; உடற்கல்வி ஆசிரியர் பணிநீக்கம் ; சென்னையில் பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 11:08 am

சென்னையில் தனியார் கல்லூரி மாணவன் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற 22 வயது மாணவன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல் சார் பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பிரசாத், நேற்று இரவு திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனால், பதறிப் போன சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, மாணவனின் உயிரிழப்பையடுத்து, சக மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. மேலும், கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் புருஷோத்தமன் பணி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!