ஓடும் ரயிலில் பெண் முன் மோசமான செயலில் ஈடுபட்ட காவலர் ; துணிகரமாக பெண் செய்த காரியம்.. ஓட்டம் பிடித்த போலீஸ்காரர்…!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 1:47 pm

ஓடும் ரயிலில் பெண் முன்பு மோசமான செயலில் காவலர் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த நபர் ஒருவர், அந்த பண் முன்பு அமர்ந்து கொண்டு மோசமான செயலில் ஈடுபட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தைரியத்துடன் அந்த நபரை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.

இதைக் கண்ட அந்த நபர் பல்லாவரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்னர், இது தொடர்பாக கடந்த 14ம் தேதி அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன் என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…