நள்ளிரவில் தடம்புரண்ட ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ்.. சென்னை அருகே அதிர்ச்சி… ரயில்வே போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan9 June 2023, 9:49 am
சென்னை ; சென்னை அருகே நள்ளிரவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் நடக்கும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நள்ளிரவில் 12 மணியளவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர், ரயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது.
பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது, ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர், 2 மணிநேர போராட்டத்திற்கு பின் ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் தண்டவாள நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.