தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை ; சென்னையில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan1 March 2024, 11:23 am
சென்னையில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் அனைத்து செயல்பாடுகளும் இங்கிருந்து தான் நடந்து வருகின்றன.
இப்படியிருக்கையில், தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு காலை 7.30 மணிக்கு வந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து, மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.