மெழுகுவர்த்தி ஏந்தி அகிம்சை வழியில் போராடும் ஆசிரியர்கள்… 9வது நாளாக நீடிக்கும் போராட்டம்…200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 8:57 am

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181- ன்படி 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக தேர்தல் வாக்குறுதி 181ஐ  தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம்  முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

தற்போது, ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, போராட்டம் தொடர்ந்து வருகிறது.

நேற்று காந்தி ஜெயந்தி தினத்தில், அகிம்சையை வலியுறுத்தும் விதமாக, மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 405

    0

    0