ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி 181- ன்படி 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக தேர்தல் வாக்குறுதி 181ஐ தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
தற்போது, ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நேற்று காந்தி ஜெயந்தி தினத்தில், அகிம்சையை வலியுறுத்தும் விதமாக, மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.