அக்ஷய திருதியை நாளில் அதிர்ச்சி… தங்கம் விலை ரூ.1,240 அதிகரிப்பு… ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு..!!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 3:50 pm

அக்ஷய திருதியில் அதிர்ச்சி… தங்கம் விலை ரூ.1,240 அதிகரிப்பு… ஒரே நாளில் 3வது முறையாக உயர்வு..!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: சினிமாவை மிஞ்சிய சம்பவம்… ரூ.12 கோடி அபேஸ் செய்த தம்பதியை கடத்திய கும்பல்… விசாரணையில் வெளிவந்த கிரஷர் கம்பெனி சம்பவம்!!

அக்ஷய திருதியை நாளான இன்று பெரும்பாலானோர் தங்கம் வாங்க நினைப்பார்கள். இந்த நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வழக்கமாக, 9 மணிக்கு மேல் விலையில் மாற்றம் நிகழும் நிலையில், இன்று அதிகாலையிலேயே ரூ.720 உயர்ந்தது. பின்னர், மீண்டும் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரே நாளில் 3வது முறையாக ரூ.1,240 உயர்ந்துள்ளது. இதன்மூலம், கிராமுக்கு ரூ.155 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!