ரூ.50 ஆயிரத்தை தாண்டப்போகும் தங்கம் விலை..? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு… கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 2:21 pm

மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் வெள்ளி விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.43,320 விற்கப்படுகிறது. இதன்மூலம், 43,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுங்கவரி உயர்வால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி பார்த்தால் விரைவில் ரூ.50000 தாண்டிவிடும் என்ற சந்தேகம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!