சென்னை – பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற அந்த விரைவு ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக பயணிகள் அலறியடித்து ஓடினர்.
பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனிடையே, ரயிலின் ஏசி பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தீ விபத்து ஏதுமில்லை. மின் கசிவினால் புகை வெளியேறியதால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு விட்டது,’ என விளக்கம் அளித்துள்ளது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.