வடமாநில பயணியை அறைந்த டிக்கெட் பரிசோதகர்… பெரம்பூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு ; அதிர்ச்சி வீடியோ..!!
Author: Babu Lakshmanan16 August 2023, 12:47 pm
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் கை நீட்டி அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதவர்களை சோதனை செய்யும் பணியில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா பணியில் இருந்தார். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளனர்.
அவர்களிடம் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளதா..? என கேட்டு விரட்டி பிடித்துள்ளார். பின்னர் அவர் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாததை அடுத்து அலுவலகத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது, அவர் ஒத்து கொள்ளாத காரணத்தால், அவரை பரிசோதகர் அக்ஷயா கை நீட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இது அப்பகுதியில் இருந்த பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கவில்லையென்றால் அவர் மீது அபராதம் அல்லது சிறை தண்டனை உட்படுத்தாமல் கை நீட்டி அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ரயில் பயணிகள் கோரிக்கையாக உள்ளது.