பட்டியலை வெளியிடாமல் குளறுபடி… சென்னை பல்கலை., ஆட்சிமன்ற குழு தேர்தலை உடனே நிறுத்துங்க ; இபிஎஸ் வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 8:19 pm

நாளை நடைபெற இருக்கும் சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கான தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கான தேர்தல் 24.2.2024 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாளான 7.2.2024 மாலை வரை தகுதியான வாக்களிப்பவர்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிடவில்லை என்றும், சென்னை பல்கலைக்கழகத்தின் 131 இணைப்பு கல்லூரிகளில், 91 சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் பல குளறுபடிகளை செய்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

எனவே 24.2.2024 அன்று நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவிற்கான தேர்தலை உடனடியாக நிறுத்துமாறும், ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்தி, அனைத்து தகுதியான வாக்களிப்பவர்களின் பெயர் பட்டியலை தேர்தலுக்கு முன்பே வெளியிட்டு முறைப்படி தேர்தலை நடத்த விடியா திமுக அரசையும், சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 235

    0

    0