யாரையோ கட்டிப்பிடிக்கிறீங்க… எங்க ஆள கட்டிப்பிடிக்க தயக்கம் ஏன்…? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 7:50 pm

சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றும்‌ வாரியத்தில்‌ கிட்டத்தட்ட 2,000 தற்காலிக தொழிலாளர்கள்‌ பத்து ஆண்டுகளுக்கும்‌ மேலாக பணிபுரிந்து வருகின்றன. சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த இந்த தற்காலிக பணியாளர்களின் பணிகள், தற்போது ஒப்பந்த அடிப்படையில்‌ தனியார்‌ நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

திமுக அரசின் இந்த செயலைக் கண்டித்து கடந்த 5 நாட்களாக சென்னை குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வடிகால் வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் போராட்டக்களத்திற்கு சென்றார். அங்கு அவர், திமுகவுக்கு எதிராகவும், சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்.

அப்போது, அவர் பேசுகையில், “யாரையோ கட்டிப்பிடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆதி திராவிடரை கட்டிப்பிடித்து கோரிக்கைகளை நிறைவேற்றாதது..? ஏன் திராவிடர்களுக்கான ஆட்சி என்கிறீர்கள், இவர்கள் திராவிடர்கள் இல்லையா..? எந்த அரசியல்வாதி காலிலும் விழாத நான் இந்த கூலி தொழிலாளர்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழத் தயார்.. என்று கூறினார்.

பேரறிவாளனின் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டிப்பிடித்ததை குறிப்பிட்டு அமெரிக்கை நாராயணன் பேசியது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?