சென்னை இளைஞர்கள் எடுத்த கடைசி செல்பி : அருவியில் குளிக்கும் போது ஏற்பட்ட சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 6:55 pm

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் பூபதேஸ்வர கோனா அருவி வனப்பகுதியின் மத்தியில் உள்ளது. இந்த அருவியில் குளிக்க சென்னையிலிருந்து ஐந்து இளைஞர்கள் வந்துள்ளனர்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் செல்பி வீடியோ எடுத்தும் சிறிய பாறை மீது இருந்து நீரில் குதித்து குளித்து கொண்டுருந்தனர். அப்போது தண்ணீரில் குதித்த மூன்று பேர் நேரமாகியும் மேலே வராததால் நண்பர்கள் இருவரும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தகவலறிந்த நாகலாபுரம் போலீசார் தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். சத்திவேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!