செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 12:53 pm

சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- 44-வது சர்வதேச செஸ்‌ ஒலிம்பியாட்‌ விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும்‌ வகையில்‌ வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

இந்தியாவில்‌, அதிலும்‌ குறிப்பாக தமிழ்நாட்டில்‌ நடைபெற்ற செஸ்‌ ஒலிம்பியாடில்‌ பொதுப்‌ பிரிவில்‌ ‘இந்திய பி அணியும்‌’, பெண்கள்‌ பிரிவில்‌ இந்திய ஏ அணியும்‌ என இரண்டு அணிகள்‌ பதக்கம்‌ வென்று செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டிக்கும்,‌ இந்தியாவிற்கும்‌ பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்‌.

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில்‌ பொதுப்‌ பிரிவில்‌ வெண்கலப்‌ பதக்கம்‌ வென்ற இந்திய பி அணிக்கும்‌, பெண்கள்‌ பிரிவில் வெண்கலப்‌ பதக்கம்‌ வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்‌)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும்‌ பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய்‌ வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vetrimaaran Viduthalai controversy A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!
  • Views: - 562

    0

    0