செஸ் உலகமே பிரக்ஞானந்தாவின் திறமையை பார்த்து வியக்கிறது : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 12:12 pm

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்தியன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார்.

கருவானா கேண்டிடேட்ஸ் சாம்பியனும் ஆவார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமாக மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா. உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், ஃபாபியோனாவை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார். செஸ் உலகமே இவரின் திறமையை பார்த்து வியக்கிறது என கூறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி