மீண்டும் நெஞ்சுவலியா? செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை.. திடீர் மருத்துவமனை மாற்றம் : போலீஸ் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 July 2024, 8:18 pm

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினல் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை நடக்க இருந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக இருந்த நிலையில் இன்று பிற்பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது,

சிறை மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு செந்தில்பாலாஜி கைது செய்யப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்த பின் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவர் எனக் கூறப்படுகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 267

    0

    0