முதலமைச்சர் ALL INDIA புரோக்கர்.. பிரதமர் INTERNATIONAL புரோக்கர் : சீமான் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 12:29 pm

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாமி தரிசனம் செய்தார்.

கோயில் சிவாச்சாரியார் தல புராணங்களை விளக்க பக்தி பரவசத்துடன் கேட்ட நாம் தமிழர் சீமான் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் சீமான் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினராள் சுடப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

வலிமையான கடற்படை வைத்திருக்கும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை காக்க மறுப்பது ஏன் மீனவர்களது வாக்கு தேவை ஆனால் அவர்களது வாழ்க்கையும் உயிரும் பற்றியும் கவலை இல்லை.

நாங்கள் ஆட்சியில் இருந்தால் தமிழக மீனவர்கள் தொட முடியுமா கேரள மீனவர்கள் எல்லை தாண்டி செல்வது இல்லையா ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவதோ சுடப்படுவதோ அவர்களது வலைகளை அறுப்பதோ நடைபெறுகிறதா ஏனென்றால் அவனுக்கு பெத்தவனே தகப்பன் எங்களுக்கோ அறுபது ஆண்டுகளாக மற்றவன் தகப்பனாக ஆட்சி செய்கிறான் நான் நெய்தல் படை அமைப்பேன் என கூறிய போது சிரித்தீர்களே இப்பொழுது பினராய் விஜயன் அதை கட்டமைத்துள்ளார் பிரதமர் உக்ரை பயணத்தை பற்றி கேட்டபோது ஊர் ஊராய் சுற்றுபவனை நாடோடி என்பார்கள் இவர் நாடு நாடாக சுற்றுப்பவர் நரேந்திர மோடி.

உக்ரைன் நாட்டை அவர்பார்க்கவில்லை போல இருக்கும் அதற்காக சென்றுள்ளார் முதலமைச்சர் அமெரிக்க பயணம் சென்று பத்தாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சரும் டிஆர்பி ராஜாவும் கூறி வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டு வழக்கு தொடருவேன் முதலமைச்சர் ஆல் இந்தியா ப்ரோக்கர் பிரதமர் இன்டர்நேஷனல் புரோக்கர் இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள் நடிகர் விஜய் கொடி அறிமுகப்படுத்தியதை கேட்டபோது வரவேற்கின்றேன் வாழ்த்துகின்றேன்.

2026 சட்டமன்ற தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்டதற்கு நான் உங்களிடம் மாட்டிக் கொள்வதால் என்னிடமே இந்த கேள்வியை கேட்கின்றீர்கள் விஜய் மாநாடு போட்டு கட்சி அறிவிக்கும் போது அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என்னை விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது விஜயை விமர்சனம் செய்கின்றனர் எனக்கு விமர்சனங்கள் அலுத்துவிட்டது என பேட்டி அளித்தார்

  • Ajith Kumar Car Racing Comeback ஆல் ஏரியா நம்ம தான் KING… துபாய் கார் ரேஸில் பட்டையை கிளப்பிய அஜித்…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 333

    0

    0