முதலமைச்சரும் டம்மி, மூத்த அமைச்சர்களும் டம்மி : விரைவில் CM பதவி காலியாகப் போகிறது.. அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2022, 8:48 am
அதிமுக தொடங்கப்பட்டு 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கூறியதவாது:- திமுக இயக்கம் என்ற தீய சக்தியை விரட்டி அடிக்கபட வேண்டுமென்று தொடங்கப்பட்ட இயக்கமாக அதிமுக தற்போது 51 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இதில் 32 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் ஆட்சி புரிந்த இயக்கமாக இருந்துள்ளது.
இன்றைக்கு யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நான் தான் தலைவர் என கூறிக்கொள்ளலாம் சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கலாம் அப்படி கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் சாதிக்க முடியவில்லை. நடிகர்களுக்கு ரசிகர் உண்டு அவர்களை மக்கள் தலைவராக ஏற்று கொள்ளமாட்டார்கள்.
அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுகொள்ளப்பட்ட தலைவர் தான் எம் ஜி ராமச்சந்திரன் எந்த அளவிற்கு சாதனைகளை அதிமுக பார்த்திருந்தாலும் சோதனைகளையும் பார்த்த இயக்கமாகயுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுபடுத்த முடியாத தலைவராக உள்ளதால் தான் கருணாநிதி இறப்பு வரை ஸ்டாலினை ஏன் தலைவராக்கவில்லை என்பது புரிகிறதா என கேள்வி எழுப்பினார்.
கருணாநிதி சுய நினைவு இழந்த பிறகு தான் ஸ்டாலினுக்கு பதவி வழங்கபட்டுள்ளதாகவும், தன்னை கைது செய்துவிட்டு தான் தூங்குவார் என கூறும் விழுப்புரத்தில் உள்ள காவல் துறை அதிகாரி அப்படியென்றால் தாளாரமாக தன்னை கைது செய்து கொள்ளுங்கள் அப்படியாவது அந்த அதிகாரி நிம்மதியா தூங்கட்டும் என சிவி சண்முகம் தெரிவித்தார்.
எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என கூறியவர்கள் மத்தியில் நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் முதல்வர் என பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி கொரனாவை சிறப்பாக கையாண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி என மத்திய அரசு அறிவித்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் தான் ஆகிறது ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விலையேற்றம் அதிகரித்து காய்கறி முதல் கட்டுமான பொருட்கள் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறினார்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிமெண்ட் விலை அதிகரிக்கும் ஏனென்றால் கருணாநிதியின் குடும்பத்தாரின் பினாமிகள் கையில் சிமெண்ட் கம்பெணிகள் உள்ளதால் தான் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என தெரிவித்தார்.
ஆளத்தெரியாத முதல்வராக தமிழக முதல்வர் உள்ளதால் செயல்படாத தமிழக அரசாக உள்ளதால் மருந்துகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் காய்ச்சலுக்கு வழங்குகிற மாத்திரைகள் கூட இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளதாக கூறினார்.
சுகாதார துறையை கவனிக்காமல் எப்பொழுதும் தன் உடம்பை காக்க மாரத்தான் ஓடிகிற சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணி உள்ளதாகவும் மருந்து கொள்முதல் செய்கின்ற டெண்டரை முடிவு செய்யாததால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையின் மருத்துவ கழகத்தை தமிழக அரசு கலைத்துவிட்டு அதை தனியார் மையமாக்கி அதன் லாபத்தையும் தனது குடும்பத்திற்கே வரவேற்பதற்காக தான் மருந்து தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார்.
தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளார்கள் டம்பி முதல்வராக ஸ்டாலினும், சினிமா துறையில் முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்கிற முதல்வராக மருமகன் சபரீசனும் மூவரை கட்டுபடுத்துகிற முதல்வராக ஸ்டாலினின் துணைவியார் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் டம்மி முதல்வரை மூன்று ஐ ஏ எஸ் அதிகாரிகள் கட்டுபடுத்துவதாகவும்
இந்து மதத்தினை பற்றி தவறான பேசினால் இந்து சமயநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு காது கேட்காது என்று தெரிவித்தார்.