அரசு ஊழலின் ஸ்லீப்பர் செல் முதலமைச்சர்… பாஜக காட்டமான விமர்சனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 6:35 pm

அரசு ஊழலின் ஸ்லீப்பர் செல் முதலமைச்சர்… பாஜக காட்டமான விமர்சனம்!!!

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு ஊழலின் ஸ்லீப்பர் செல் என பாஜ., விமர்சனம் செய்துள்ளது.

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக, பாஜ., செய்தி தொடர்பாளர் செய்யது ஜாபர் இஸ்லாம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: “இண்டியா” கூட்டணி கட்சிகள் இப்போது தேசத்தை கொள்ளையடிக்க தங்கள் ‘ஸ்லீப்பர் செல்களை’ செயல்படுத்துகின்றது.

அதில் ஒன்று தான் ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரனின் அரசு. அவர், 10 முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளார். அவர் எதிர்க்கட்சிகளின் “இண்டியா” கூட்டணியில் உள்ளார். காங்., மத்தியில் ஆட்சி இல்லாததால், அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. எனவே அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!