வாடகைக்கு ரயிலை வாங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் : மக்களின் வரிப்பணங்கள் சூறை.. செல்லூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 11:35 am

திமுக அரசை கண்டித்து நாளை அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, அதிமுகவின் தொடர் போராட்டம் வெற்றி பெறுவதை அமைச்சர்களால் திமுகவால் தாங்க கொள்ள முடியவில்லை.

திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டு பொறுப்படுத்த மாட்டோம். அதிமுகவின் நோக்கம் தெளிவானது. எங்களின் எண்ணம் உயர்வானது. திமுக மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது.

அதிமுகவை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு சரியான சிவுக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும்.அதிமுக ஒன்றுபட்ட இயக்கம். அதிமுகவில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம்.
அதைப்பற்றி பொருட்படுத்த வில்லை. திமுக அமைச்சர்கள் கலெக்க்ஷன், கரெப்ஷன் என உள்ளனர். அவர்களின் ஊழலை மறைக்க எங்களை குற்றம் சாட்டுகின்றனர்.

அதிமுக எதிர்காலத்தை கருதி போராட்டங்களை நடத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை.
தேர்தல் வரும் போகும், நாங்கள் மக்கள் நலுனுக்காகத்தான் போராடி வருகிறோம்.

பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது திமுக.
தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் ஆறாக பெருகி உள்ளது. உதயநிதி அமைச்சராக உள்ளது குறித்த கேள்விக்கு? திமுக பெருபான்மையாக உள்ளதால் யாரையும் அமைச்சராக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. யாரை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

திமுக என்றாலே ஒரு கம்பெனி தான். கட்சி அல்ல கலைஞரின் பிரைவேட் கம்பெனி. தென்காசி பயணத்துக்கு சொகுசு வண்டியில் வந்திருக்கிறார். லட்சக்கணக்கில் வாடகைக்கு கொடுத்து ரயில் பெட்டியை வாங்கி உள்ளார்கள். இதற்கு பிளைட்டில் போய் இருக்கலாம். மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுகிறது.

திராவிட மாடல் முதலமைச்சர். சென்னை மாநகராட்சியின் மேயர் வாகனத்தில் தொத்திக்கொண்டு ஏறுகிறார் தொங்கிக் கொண்டே வருகிறார். இதைவிட மிகப் பெரிய கொடுமை மாநகராட்சி ஆணையாளரும் தொங்கி கொண்டு வருகிறார். எவ்வளவு மோசமான செயல் இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வண்டியை நிறுத்த சொல்லி மேயருக்கு உரிய அறிவுரை கொடுத்து இருக்க வேண்டும். மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து இருக்க வேண்டும்..

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருந்தது. முதலமைச்சர் தலைமையில் எந்த அமைச்சர் துறையும் சரியாக இல்லை. கூட்டுறவுத் துறையை மற்ற அமைச்சர்கள் கேலி கிண்டல் செய்கிறார்கள்.

திமுக ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நடந்த வரலாறே கிடையாது. என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!