ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின் : ‘முதல்வன்’ பட பணியில் உடனே எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 1:59 pm

ராணிப்பேட்டை : சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் 47 ஆண் பிள்ளைகள் தங்கி பள்ளி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பெற்றோர்கள் இல்லாதவர்கள் அல்லது ஒற்றை பெற்றோர் உடையவர்கள்.

இதில் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 16 மாணவர்களும் காரை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு பாடம் சொல்லித்தர சமூக நலத்துறையின் கீழ் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் இல்லத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் கோமளா, மேலாளர் மணிகண்டன் உள்ளிட்ட 47 பணியாளர்கள் இந்த சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வருகை தந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்த பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் திடீரென காரை கூற்றோடு பகுதியில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் ஒற்றைப் பெற்றோர்கள் உள்ள மாணவர்களிடம் குழந்தைகள் இல்லம் குறித்தும் உணவு வழங்குவது குறித்தும் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடிய போது மாணவர்கள் சில புகார்களை தெரிவித்தனர். அப்போது பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடனே அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உடனடி நடவடிக்கை அரசு அதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 1187

    0

    0