கறிக்குழம்புடன் இட்லி… நரிக்குறவரின் இல்லத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் : நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது ‘ருசி’கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 11:58 am

திருவள்ளூர் : நரிக்குறவர்களுக்கு நலத்திட்டம் வாங்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவியின் வீட்டுக்கு சென்று சிற்றுண்டி அருந்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

அதன்படி, நரிக்குறவர்களுக்கு ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முதலமைச்சருடன், நரிக்குறவர் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

இதன்பின் ஆவடியில் நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இட்லி, வடை உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார். மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1294

    1

    0