கூட்டணி கட்சிகளிடம் கெஞ்சி, கூத்தாடும் முதலமைச்சர் ஸ்டாலின்.. அதிமுக தான் காரணம் : ஒப்புக்கொண்ட ஜெயக்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 4:27 pm

கூட்டணி கட்சிகளிடம் கெஞ்சி, கூத்தாடும் முதலமைச்சர் ஸ்டாலின்.. அதிமுக தான் காரணம் : ஒப்புக்கொண்ட ஜெயக்குமார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் சிறுபான்மை நலப்பிரிவின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் தொண்டர்கள் விருப்பப்படி, பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவெடுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி உள்ளிட்ட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,பா.ஜ.க உடன் எப்போதும் கூட்டணி இல்லை என தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

திமுக கொடுப்பதை வாங்கி கொள்ளும் நிலையில் இருந்த சிறுபான்மை கட்சிகள் இன்று டிமாண்டை ஏற்றியுள்ளதாகவும், கெஞ்சி கூத்தாடி கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தக்க வைத்துள்ளதாக பேசினார்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் தான் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பு இருந்ததாகவும், திமுக ஆட்சியில் தான் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு நன்மை கிடைக்கும் என சொன்னார்கள். ஆனால் சிறுபான்மையினர் கல்வி, சமூகம் , பொருளாதாரம் என எதிலும் ஏற்றமடையவில்லை. இதை சிறுபான்மை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என கூறினார்.

  • Vanitha Talked About his marriage and Reply to haters நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. என்னால முடியும்.. உங்களுக்கென்ன? வனிதா அதிரடி!