மீண்டும் வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… அமெரிக்காவுக்கு பயணம் : அமைச்சர் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 3:59 pm
TRB
Quick Share

தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், மலேசியாவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் மூலம் ரூ.10,882 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் 18,500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். விரைவில் அமெரிக்கா சென்று, பெரிய தொழில் நிறுவனங்களை சந்தித்து தொழில் முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்க்க உள்ளார்.

சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளன.

631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின என்றார்.

Views: - 88

0

0